விஷால் நடிகராக மட்டும் இல்லாமல் விஷால் பில்ம் பேக்டரி என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் அவர் நடித்த பாண்டியநாடு, ஆம்பள, துப்பறிவாளன், இரும்புத்திரை என பல ஹிட் படங்கள் தயாரிக்கப்பட்டன. தற்போது சக்ரா மற்றும் துப்பறிவாளன் 2 ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன.
தயாரிப்பு நிறுவனத்தில், ₹45 லட்சம் கையாடல் செய்ததாக பெண் கணக்காளர் ரம்யா மீது போலீசில் புகார். வருமான வரித்துறைக்கு கட்ட வேண்டிய தொகை ரூ.45 லட்சத்தை, கையடால் செய்ததாக விஷாலின் மேலாளர் ஹரி விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார். இது சம்மந்தமாக தற்போது விருகம்பாக்க காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.