V4UMEDIA
HomeNewsBollywoodசதக்2- ஒடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸ் !!

சதக்2- ஒடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸ் !!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் சில படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீசாகின்றன. தமிழில் ’பொன்மகள் வந்தாள்’ ’பெண்குயின்’ ஆகிய திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் பாலிவுட் உட்பட பல மொழிகளிலும் பல முன்னணி நடிகர் நடிகைகளின் திரைப்படங்கள் ஒடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸ் ஆகி வருகிறது.

சஞ்சய் தத் நடிப்பில் 1991ம் ஆண்டில் ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் “சதக்” . 29 ஆண்டுகளுக்கு பின் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஹிந்தியில் “சதக் – 2” பெயரில் அலியா பட் நடிக்க மகேஷ் பட் இயக்கியுள்ளார். “சதக் – 2” படத்தை ஓடிடியில் வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முதல் நாள் முதல் ஷோவாக வீட்டில் இருந்தபடியே டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் கண்டு மகிழலாம். வெளியிட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். 



அலியா பட், சஞ்சய் தத் நடித்துள்ள இப்படத்தை மகேஷ் பட் இயக்க முகேஷ் பட் தயாரித்துள்ளார். ராகவ லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்த “லட்சுமி பாம்” திரைப்படமும் டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mahesh Bhatt's film 'Sadak 2' to premiere directly on OTT platform ...

Most Popular

Recent Comments