V4UMEDIA
HomeNewsKollywoodவைரலாகும் யாஷிகா ஆனந்தின் புகைப்படம் !

வைரலாகும் யாஷிகா ஆனந்தின் புகைப்படம் !

யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளத்தில் காத்துக் கிடக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் யாஷிகா பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் யாஷிகா ஆனந்தின் புகைப்படத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.



தமிழில் ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம். இதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்துள்ளார் .

தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக இருக்கிறது .





யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அந்த வகையில்,யாஷிகா ஆனந்த் மூன்று மாதத்தில் தன் எடையைக் குறைக்க யாஷிகா அந்த புகைப்படத்தை தன் டிவிட்டர் பக்கத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தோடு ஒப்பிட்டு வெளியிட்டுள்ளார்.

Most Popular

Recent Comments