12பி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் ஷாம். அதன் பின்னர் ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, லேசா லேசா, இயற்கை, உள்ளம் கேட்குமே, ABCD, மனதோடு மழைக்காலம், தில்லாலங்கடி, 6 என பல திரைப்படங்களில் ஹீரோவாகவும், முக்கிய கேரக்டர்களிலும் நடித்தவர் நடிகர் ஷாம்.
இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக நடிகர் ஷாம் தனது வீட்டில் சூதாட்ட கிளப் நடத்தி வருவதாகவும் அதில் முக்கிய சினிமா நடிகர்கள், இயக்குனர்கள் மட்டுமின்றி பல தொழிலதிபர்கள் கலந்து கொண்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியே வந்தன. இதுகுறித்து காவல்துறையினர் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்து நேற்று ஷாம் வீட்டை சுற்றிவளைத்து சோதனை செய்தனர்.

அப்போது ஷாம் உட்பட 14 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் அவர்களடிமிருந்து லட்சக்கணக்கில் பறிமுதல் செய்ததாகவும் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து ஷாம் உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர். தற்போது கைது செய்யப்பட்ட 14 பேரும் சொந்த ஜாமீனில் விடுதலையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.