விதார்த், ரவீனா ரவி, ஜார்ஜ் மரியா ஆகியோர் நடிப்பில் “ஒரு கிடாயின் கருணை மனு” என்ற படத்தை சுரேஷ் சங்கையா என்பவர் இயக்கியிருந்தார். இப்படத்தை ஈரோஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்தது. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தில் ஒரு ஆடும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இயக்குனர் சுரேஷ் சங்கையா நீண்ட நாள் கழித்து தனது இரண்டாவது பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு ‘சத்திய சோதனை’ என்று பெயரிடிப்பட்டுள்ளது. பிரேம்ஜி இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். சமீர் பாரத் ராம் என்பவர் தயாரிக்கிறார். சத்திய சோதனை படம் உண்மை சம்பவங்களை பின்னணியாக வைத்து நகைச்சுவையாக எடுக்கப்படுகிறது என படக்குழு தெரிவித்துள்ளனர்.
My next film “SATHIYA SOTHANAI” directed by suresh sangaiah produced by sameer Bharat ram 🙏🙏🙏 @sureshsangaiah @sameerbr pic.twitter.com/1ZxcYNx4Jz— PREMGI (@Premgiamaren) July 22, 2020