தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடகர் மற்றும் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ். கொரோனா ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்புகள் இன்றி வீட்டில் தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இதனால் 24 மணி நேரமும் வீட்டிலிருக்கும் பிரபலங்கள் ஓய்வு நேரங்களில் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் பேசுவது என பிஸியாக தங்களை வைத்துள்ளனர்.
அந்தவகையில் ஜி.வி. பிரகாஷ் சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டீவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஜி.வி. பிரகாஷ் ‘ஹேப்பி தி ராஜபாளையம்’ என்ற தலைப்பில் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி யுள்ளது. அவர் வீட்டில் வளர்த்து வரும் ராஜபாளையம் நாய் “ஹேப்பி”யை குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Support native breeds.. my small tribute for indian native breeds .. pet lovers do share #HappyTheRajapalayam
Full Video Link ⬇️https://t.co/axT5TZb675 pic.twitter.com/KPm7QD0p6g— G.V.Prakash Kumar (@gvprakash) July 22, 2020