கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடெங்கும் மே 03 வரை ஊரடங்கு உத்தரவு மத்திய அரசு பிற்படுத்தப்பட்டுள்ளது. சினிமா படப்பிடிப்புகள் இல்லாத நிலையில், பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் தனது மாமனார் நாகார்ஜுனாவுடன் இணைந்து செடிகளை நட்டு தண்ணீர் ஊற்றி பராமரிக்கும் வீடியோ ஒன்றை நடிகை சமந்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். செடிகளை பராமரிக்கும் சேலஞ்சை ராஜ்யசபா எம்பி சந்தோஷ்குமார் அவர்கள் தான் சமந்தாவுக்கு கொடுத்தார்.
அந்த சேலஞ்சை நிறைவேற்றிய சமந்தா, தனது பங்குக்கு கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா, ஷில்பா ரெட்டி மற்றும் ரசிகர்களுக்கு மூன்று செடிகள் நட்டு, அதனை பராமரிக்க வேண்டும் என சமந்தா கேட்டுக்கொண்டார்.
சமந்தாவின் இந்த கோரிக்கையை ஏற்ற ராஷ்மிகா மந்தனா தன் வீட்டு தோட்டத்தில் செடி நட்டு வைத்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு நடிகைகள் ராஷி கண்ணா, கல்யாணி பிரியதர்ஷன் , ஆஷிகா ரங்கநாத் ஆகிய மூவரையும் நாமினேட் செய்துள்ளார்.
தற்போது ராஷ்மிகா மந்தனாவின் கோரிக்கையை ஏற்ற ராஷி கண்ணா தன் வீட்டு தோட்டத்தில் செடி நட்டு வைத்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், தமன்னா, காஜல் அகர்வால் ஆகிய மூவரையும் நாமினேட் செய்துள்ளார். தெலுங்கு சினிமாவில் இது ஆரோக்கியமான செயலாக பார்க்கப்படுகிறது மற்றும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றது.