திரையில் ஜோடியாக நடிக்க ஆரம்பித்து பின் நண்பர்களாகி பிறகு காதலித்து பல போராட்டங்களுக்கு பிறகு திருமணம் செய்து கொண்ட ஜோடி சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் தனித்தனியாக நடித்து கொண்டிருந்தாலும் இருவரும் இணைந்து நடிக்க மாட்டார்களா என ஏக்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், பிரபல இயக்குனர் ஹலிதா ஷமீம் இருவரையும் ஜோடியாக நடிக்க வைக்க ஒரு கதையை தயார் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடிகர் சூர்யா தயாரிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற “சில்லுக்கருப்பட்டி” படத்தை இயக்கியவர் ஹலிதா ஷமீம்.
சூர்யா தற்போது சூரரை போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். ஹரி இயக்கத்தில் அருவா மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.