இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் இந்தாண்டு வெளியான “சைக்கோ” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. கடைசியாக இயக்கி வந்த “துப்பறிவாளன் 2” படத்தில் இருந்து நடிகர் விஷாலுடன் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக விலகினார். மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா நடித்த ‘துப்பறிவாளன்’ திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
லண்டனில் படப்பிடிப்பு நடந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் மிஷ்கின் மற்றும் படத்தின் நடிகர், தயாரிப்பாளர் விஷால் ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்டது.
இந்த நிலையில் ‘துப்பறிவாளன் 2’ படத்தை மீண்டும் இயக்குனர் மிஷ்கினே இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகி என எதிர்பார்க்கப்படுகிறது.