தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு. இவர் தனது 45வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இரண்டு தினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் யாரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் கொண்டாட வேண்டாம் என அறிக்கை வெளியிட்டார். கொரோனா வைரஸ் தொற்று அச்சம் மக்களிடையே நிலவும் நிலையில், தனது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட்டம் என்ற பெயரில் நலத்திட்ட உதவிகள், செய்தித்தாள் வாழ்த்துகள் ஆகியவற்றை அளிப்பதைத் தவிர்த்து வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவிருந்தார்.
இதனால் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மகேஷ் பாபு பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடி வருகின்றனர். அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் டுவிட்டரில் மகேஷ் பாபுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். #HBDMaheshBabu என்ற ஹேஷ்டேக்கில் உலகம் முழுவதும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.