V4UMEDIA
HomeNewsKollywoodநடிகர் கருணாஸுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது எப்படி ?? உறுதி செய்த மகன் கேன்

நடிகர் கருணாஸுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது எப்படி ?? உறுதி செய்த மகன் கேன்

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மக்கள் மற்றும் நடிகர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் வரிசையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் திருவாடனை தொகுதி எம் எல் ஏ வுமான கருணாஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இந்நிலையில் அவருக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என் அவரது மகன் கென் கருணாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் ‘என் தந்தை ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் அவர் தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்து வருவதால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர் உடல்நிலை சீராக உள்ளது. உங்கள் அனைவரின் நல விசாரிப்புகளுக்கும் நன்றி. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். தேவை இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள்’ என நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

🙏 pic.twitter.com/R0ndpbEKcm— Ken Karunaas (@KenKarunaas) August 6, 2020

Most Popular

Recent Comments