குரூப் டேன்சராக தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையை தொடங்கினாலும், தனது அயராத முயற்சி மற்றும் கடின உழைப்பால் இந்தியாவின் தலைசிறந்த நடன இயக்குனராக வளர்ந்தார். இந்தியாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, விஜய் படங்களுக்கு நடன இயக்குனராக பணிபரிந்துள்ளார். பின் இயக்குனராக தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் சிக்ஸர் அடித்தார். இவர் நடித்த அனைத்து படங்களும் பெரிய ஹிட் ஆனது. தான் எவளோ சம்பாதித்தாலும் அதில் பெரும்பகுதியை நலத்திட்ட உதவிகளுக்கும், தான் நடத்தி வரும் அறக்கட்டளைக்கும் கொடுப்பார்.
இந்த இளைஞனின் தன்னம்பிக்கையை பார்க்கும் பொழுது வாழ்க்கையில் எப்பேர்பட்ட மனிதனுக்கும் தன்னம்பிக்கை பிறக்கும், இவருக்கு என்னால் முடிந்த உதவியாக 1 லட்சம் கொடுக்க ஆசைப்படுகிறேன்.யாரேனும் இவரது தொடர்பு கிடைத்தால் பகிரவும், நன்றி. “இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்”❤️ pic.twitter.com/FSwfc93rKZ— Raghava Lawrence (@offl_Lawrence) August 4, 2020
கொரோனா வைரஸ் பாதிப்புக்காக தமிழ் சினிமாவில் நிவாரண நிதி அதிகமாக கொடுத்த நடிகர் லாரன்ஸ். இது மட்டுமின்றி தான் அடுத்தடுத்து நடிக்கும் படங்களின் தயாரிப்பாளர்களை தொடர்பு கொண்டு தனது சம்பளத்தில் ரூபாய் 25 லட்சத்தை தூய்மை பணியாளர்களுக்கு அளிக்குமாறு கூறியுள்ளார்.
இந்நிலையில் பிச்சை எடுத்து அதில் கிடைத்த வருமானத்தில் ஒரு பகுதியை சேமித்து வைத்து டீ விற்று இன்று தொழிலதிபராக வளர்ந்து வரும் வாலிபர் ஒருவருக்கு ஒரு லட்ச ரூபாய் உதவி செய்ய விரும்புவதாக ராகவா லாரன்ஸ் டுவிட் செய்துள்ளார்.
மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஊரடங்கு காரணமாக வேலையின்றி உண்ண உணவும் இல்லாமல் பிச்சை எடுக்க ஆரம்பித்துள்ளார். பிச்சை எடுத்த பணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேர்த்து வைத்து, அதில் தான் சேமித்த ரூ.7000ல் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அந்த வீட்டிலிருந்து டீ விற்கும் தொழில் செய்து வருகிறார்.
இந்த தொழிலில் கிடைக்கும் வருமானத்தை வைத்து, தன்னை போல யாரும் கஷ்டப்படக்கூடாது என தினமும் காலை மாலை இரவு என மூன்று வேளைகளிலும் 10 பேருக்கு இலவசமாக உணவளித்து வருகிறார்.
மேலும் தனது வாழ்நாள் லட்சியமே எதிர்காலத்தில் ஒரு முதியோர் இல்லம் ஆரம்பித்து அதில் அனாதையாக இருக்கும் முதியோர்களை பராமரிக்க வேண்டும் என வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். நான் தன்னம்பிக்கையுடன் இதை நிறைவேற்றுவேன் என்றும் அதற்கு எனக்கு கடவுள் உறுதுணையாக இருப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில் இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார். அதில் ” இந்த இளைஞனின் தன்னம்பிக்கையை பார்க்கும் பொழுது வாழ்க்கையில் எப்பேர்பட்ட மனிதனுக்கும் தன்னம்பிக்கை பிறக்கும், இவருக்கு என்னால் முடிந்த உதவியாக 1 லட்சம் கொடுக்க ஆசைப்படுகிறேன்.யாரேனும் இவரது தொடர்பு கிடைத்தால் பகிரவும், நன்றி. “இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்”❤️ ” என கூறியுள்ளார்.