V4UMEDIA
HomeNewsKollywoodஇந்த பெருமை அனைத்துக்கும் காரணம் சத்யராஜ் தான் ! 'தீர்ப்புகள் விற்கப்படும்' படக்குழுவினர் உற்சாகம்

இந்த பெருமை அனைத்துக்கும் காரணம் சத்யராஜ் தான் ! ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படக்குழுவினர் உற்சாகம்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட சத்யராஜ் நடிக்கும் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தின் புதிய போஸ்டருக்குக் கிடைத்த மிகப் பெரிய வரவேற்பால் ஒட்டு மொத்த படக்குழுவும் மிகவும் உற்சாகம் அடைந்திருக்கிறது.




ஹனி பீ படநிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் சஜீவ் மீராசாஹிப் ராவுத்தர் இது குறித்து விவரிக்கையில், “எங்கள் படத்தின் போஸ்டருக்கு ஒவ்வொருவரிடமிருந்தும் கிடைத்த மகத்தான நேர்மறை வரவேற்பு எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. ரசிகர்கள் நிச்சயமாக எங்கள் படத்தை உச்சி முகர்ந்து பாராட்டுவார்கள் என்ற நம்பிக்கையை இந்த வரவேற்பு ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் பெருமைகள் அனைத்தும் சத்யராஜ் சாரையே சேரும். அவர் எங்கள் படத்தின் பிரதான பாத்திரத்தில் நடித்திருப்பது, ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கைக்குரிய மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முழுப் படத்தையும் ரசிகர்களுக்கு விருந்து படைக்க இதற்கு மேலும் காத்திருக்க முடியாது. இறுதி கட்ட பின் தயாரிப்புப் பணியில் இருக்கும் இப்படம் விரைவில் தணிக்கைக்கு அனுப்பபடவிருக்கிறது” என்றார்.

Image

தீரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தில் ஸ்மிருதி வெங்கட், மதுசூதன் ராவ், ஹரீஷ் உத்தமன் மற்றும் ரேணுகா ஆகியோர் நடித்திருக்கின்றனர். பிரசாத் எஸ்.என். இசையமைக்கும் இப்படத்தை கருடவேகா ஆஞ்சி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பணிகளை நுஃபல் அப்துல்லா கவனிக்கிறார். சண்டைக் காட்சிகளை தினேஷ் சுப்பராயன் அமைக்கிறார்.

Most Popular

Recent Comments