100 மில்லியன் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்ட “நீயும் நானும்” பாடல் !
நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி படமான “இமைக்கா நொடிகள்” படத்தில் இடம்பெற்றுள்ள “நீயும் நானும் அன்பே” பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கபட்டுள்ளது.
2019ம் ஆண்டு நயன்தாரா மற்றும் அதர்வா நடிப்பில் வெளியானது இமைக்கா நொடிகள். இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்க, சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். விஜய் சேதுபதியும் நயன்தாராவும் இடம்பெறும் “நீயும் நானும் அன்பே” பாடல் தற்போது யுடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு மாபெரும் சாதனை படைத்துள்ளது.
இது குறித்து தங்கள் மகிழ்ச்சியை படக்குழுவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க, படலாசிரியர் கபிலன் வரிகளை எழுதியிருந்தார்.