இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக கருதப்படும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமாகப் போகிறது.
இப்படத்தை தார் மோஷன் பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. முத்தையா முரளிதரன் ஆக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்க உள்ளார்.திரு எம் எஸ் ஸ்ரீபதி இப்படத்தை எழுதி இயக்க உள்ளார். தமிழில் உருவாகும் இப்படம், உலகின் பல மொழிகளில் வெளியிடப்பட இருக்கிறது.
இந்த நிலையில் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். இசையமைக்கிறார் என்ற தகவல் வெளியாகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.