துல்கர் சல்மான், ரக்சன், ரிதுவர்மா, நிரஞ்சனா, கவுதம் மேனன் நடிப்பில் இயக்குனர் இயக்கிய படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ . இத்திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இது துல்கர் சல்மானின் 25வது படமாகும்.

இந்த வருடத்தில் இதுவரை வெளிவந்த படங்களில் அதிக லாபம் மற்றும் அனைவருக்கும் பிடித்த படம் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” என்றால் மிகையாகாது. இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டி வந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கு போன் செய்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் ” எக்ஸலன்ட் ! சூப்பர் படம் ! சாரி இவ்ளோ நாளா இந்த படத்தை பார்க்காமல் விட்டுவிட்டேன். உங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. படம் மிக சுவாரஸ்யமாக இருந்தது நல்ல திரைப்படம். தனக்கு ஒரு நல்ல கதையுள்ள படத்தை எடுங்கள். ஏதாவது டிஃபரண்டா கொஞ்சம் புதுமையாக யோசிச்சு சொல்லுங்க என கூறிவிட்டு காட் பிளஸ் யூ” என வாழ்த்து தெரிவித்துள்ளார்