கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் சினிமா படப்பிடிப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசு இதுவரை எந்த ஒரு தளர்வையும் திரைத்துறை படப்பிடிப்புகளுக்கு அளிக்கவில்லை. ஆனால் வெப் சீரியஸ் மற்றும் ஷார்ட் பிலிம் படபிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சினிமா பிரபலங்கள் பலரும் ஆல்பம் பாடல்கள், OTT, குறும்படங்கள் என புதிய களத்தில் களமிறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் பிரபல நடிகை இந்துஜாவின் நடிப்பில் பாடல் ஒன்று வெளியாகவுள்ளது.இயக்குநர் விக்னேஷ் சிவன் வரிகளில், எனாக் இயக்கத்தில், நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் அவர்களின் கருத்து மற்றும் நடன அமைப்பில், அனிருத் விஜய்யின் இசையில், மணிகண்டன் ஒளிப்பதிவில், அமர்நாத்தின் எடிட்டிங்கில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது.
இந்தப் பாடலில் இந்துஜாவும், அமிதாஷும் இணைந்து நடித்துள்ளனர். “கொரோனா கண்ணால” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல் நாளை (ஆகஸ்ட் 21ம் தேதி) சோனி மியூசிக்கில் வெளியாகவுள்ளது.