விஷால் நடிகராக மட்டும் இல்லாமல் விஷால் பில்ம் பேக்டரி என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் அவர் நடித்த பாண்டியநாடு, ஆம்பள, துப்பறிவாளன், இரும்புத்திரை என பல ஹிட் படங்கள் தயாரிக்கப்பட்டன. தற்போது சக்ரா மற்றும் துப்பறிவாளன் 2 ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன.
விஷால் ஜோடியாக ரெஜினா மற்றும் ஷ்ராதா ஸ்ரீநாத் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிவடையும் உள்ள நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ள திரைப்படம் “சக்ரா”. இப்படத்தை எம்.எஸ். ஆனந்தன் இயக்கியுள்ளார், இவர் இயக்குனர் எழிலிடம் உதவியாளராகப் பணிபுரிந்தவர். ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Here we go! Chakra Trailer OST 💥
▶️ https://t.co/CYmHdKctC7#WelcomeToDigitalINDIA #Chakra #ChakraOST@ReginaCassandra @ShraddhaSrinath @thisisysr @manobalam @srushtiDange @AnandanMS15 @VffVishal pic.twitter.com/lm6f3INM5C— Vishal (@VishalKOfficial) August 15, 2020
“சைபர் க்ரைம் பற்றிய படம்தான் “சக்ரா”. அதுமட்டுமல்ல இந்த படத்தின் ஒரு காட்சி கூட வேறெந்த படத்திலும் நீங்கள் பார்த்திருக்க முடியாது. ஆன்லைன் வர்த்தக மோசடிகள் பின்னணியில் உருவாகியுள்ள கதை “சக்ரா”. வங்கிக் கொள்ளையர்களை விட சைபர் ஹேக்கர்ஸ் என்பவர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்பது தான் படத்தின் ஒன்லைன்.
தற்போது ‘சக்ரா’ படத்தின் டிரெய்லரின் பின்னணி இசையை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். யுவன் இசையில் வெளிவந்துள்ள இந்த சவுண்ட் ட்ராக் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.