V4UMEDIA
HomeNewsKollywoodதிரையரங்கு ஊழியர்களின் வறுமையை போக்க உதவிய தளபதி விஜய் ரசிகர்கள் !

திரையரங்கு ஊழியர்களின் வறுமையை போக்க உதவிய தளபதி விஜய் ரசிகர்கள் !

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி தொழிலர்கள் பலர் வேலை மட்டும் உணவின்றி தவித்து வருகின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்து கொடுக்கின்றனர். 


இந்நிலையில் திரையரங்கு ஊழியர்களை வறுமையை போக்கும் வகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மளிகை காய்கறி பொருட்கள் மற்றும் விருந்து அளிக்கப்பட்டது.

விருத்தாச்சலம் அருகே உள்ள திரையரங்கு ஊழியர்கள் அனைவரின் குடும்பத்திற்கும், விருத்தாசலம் பகுதியிலுள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி, வேட்டி, சேலை உள்பட அனைத்தும் வழங்கப்பட்டது.

அது மட்டுமன்றி அனைத்து திரையரங்க ஊழியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு மதிய விருந்தும் தடபுடலாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய் ரசிகர்களின் இந்த செயலை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர்.

புகழ் அனைத்தும் தளபதிக்கே..@actorvijay #Master
நன்றி @sunnewstamil pic.twitter.com/BYLL2d3xL8— M Abbas (@AbbassMf) August 14, 2020

Most Popular

Recent Comments