பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் உள்ளார். நேற்று மாலை பிரபல நடிகரும் இயக்குனருமான மனோபாலா தனது டிவிட்டர் பக்கத்தில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். #SPB #PrayforSPB #SPbalasubramanyam என சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனை தொடர்ந்து, எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மனைவி சாவித்ரிக்கும் கொரோனா தொற்று உறுதியானது. கொரோனாவால் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஐ.சி.யூ.வில் தீவிர சிகிச்சையில் உள்ள நிலையில் அவரது மனைவிக்கும் தொற்று உறுதியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் நண்பரும் இசையமைப்பாளருமான இளையராஜா நேற்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்
“பாலு ! சீக்கிரம் வா ! இசையை விட்டு ஸ்வரங்கள் பிரிந்து போகாததைப் போல் தான் உனக்கும் எனக்கும் இடையேயான நட்பு. நம் சண்டை போட்டாலும் நட்பாகவே இருந்தோம். அது உனக்கும் எனக்கும் தெரியும். பாலு எழுந்து வா ! உனக்காக காத்திருக்கிறேன்” என உருக்கமாக பேசியுள்ளார்.
இறைவா 🙏🙏🙏 pic.twitter.com/SUTJDmE8mp— Dhanush (@dhanushkraja) August 14, 2020