2016–2022 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு
ஏழு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 2016 முதல் 2022 வரை தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளை மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த விருதுகளில் விஜய் சேதுபதி, தனுஷ், நயன்தாரா, மஞ்சு வாரியர், கார்த்தி, சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ், ஜோதிகா, சாய் பல்லவி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட முன்னணி நடிகர்–நடிகைகள் சிறந்த நடிப்பிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த திரைப்படங்கள் பட்டியலில் மாநகரம், அரம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.


விருது அறிவிப்பை தொடர்ந்து, விஜய் சேதுபதி, தனுஷ், நயன்தாரா, மஞ்சு வாரியர், ஜோதிகா உள்ளிட்டோர் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்த விருதுகள் பிப்ரவரி 13 அன்று நடைபெற உள்ள விழாவில் வழங்கப்பட உள்ளன.
















