V4UMEDIA
HomeNewsBollywood'வார்-2' திரைப்படத்தில் புதுவிதமான தோற்றத்தில் ஜூனியர் என்.டி.ஆர்!

‘வார்-2’ திரைப்படத்தில் புதுவிதமான தோற்றத்தில் ஜூனியர் என்.டி.ஆர்!

‘வார்-2’ டீசரில் ஜூனியர் என்.டி.ஆர் அவரது காந்தம் போன்ற, சிந்தனைமிக்க தோற்றத்தில் தனித்து தெரிந்தார். 2025-ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘வார்-2’ திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் கதாபாத்திரம் ஸ்டைல் மற்றும் ஆக்ரோஷத்தை பிரதிபலிக்கும் வகையில் இருந்ததைக் கண்டு ரசிகர்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்கள் எவ்வாறு அன்பைப் பொழிந்துள்ளனர் என்பதைக் கண்டு ஆடை வடிவமைப்பு கலைஞரான அனைதா ஷ்ராஃப் அட்ஜானியா மிகவும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார் .

நாட்டின் சிறந்த ஆடை வடிவமைப்பு கலைஞரான அனைதா ஷ்ராஃப் அட்ஜானியா கூறியதாவது:
‘வார்-2’ படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் தோற்றத்தை சிறந்த முறையில் உருவாக்க வேண்டும் என நான் விரும்பினேன். அதன்படி, “ ‘வார்-2’ படத்தின் மூலம் முதல் முறையாக ஜூனியர் என்.டி.ஆர் உடன் இணைந்து பணியாற்றுவதில் முழுமையான மகிழ்ச்சி அடைகிறேன். ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் கதாபாத்திரத்தில் புன்னகை, அரவணைப்பு போன்ற ஆழமான, அமைதியான உணர்ச்சிகளை நீங்கள் காண்பீர்கள். அவர் படம் துவங்கப்பட்டதிலிருந்தே தனது கதாபாத்திரத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து வைத்திருந்தார்.”

அவர் மேலும் கூறுகையில்,“அவரது தோற்றத்தின் மூலம் அவரது கதாபாத்திரத்தை நிலைநிறுத்த விரும்பினேன். அதற்காக அவர் மிகவும் சிரமமின்றி சுமக்கும் வகையில் மனித இயந்திரம் போல உள்ள மேலாடையை உருவாக்கினேன். இந்த உடைகள் தோல், கரடுமுரடான அடுக்குகளைக் கொண்ட அமைப்பாகும்.

ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் அயன் முகர்ஜி இயக்கியுள்ள ‘வார்-2’ திரைப்படத்தில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர், கியாரா அத்வானி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ‘வார்-2’ வருகின்ற ஆகஸ்ட் 14-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Most Popular

Recent Comments