V4UMEDIA
HomeNewsKollywoodஎடிசன் விருதை வென்ற விஜய் கனிஷ்கா!

எடிசன் விருதை வென்ற விஜய் கனிஷ்கா!

மலேசியாவில் நடைபெற்ற 2025 – ஆம் ஆண்டுக்கான எடிசன் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை நடிகர் விஜய் கனிஷ்கா வென்றார்!

‘Rising Star’ விஜய் கனிஷ்காவுக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான மதிப்புமிக்க விருதானது – சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற எடிசன் விருதுகள்-2025-இல், அவரது நடிப்பில் 2024-ஆம் ஆண்டு வெளியான அதிரடி த்ரில்லர் திரைப்படமான ‘ஹிட் லிஸ்டில்’ தலைசிறந்த நடிப்பிற்காக வழங்கி கௌரவிக்கப்பட்டது. இத்திரைப்படத்தை சூர்யகதிர் காக்கல்லர் மற்றும் கே. கார்த்திகேயன் இயக்கத்தில், ஆர். கே. செல்லுலாய்ட்ஸ் நிறுவனம் சார்பில் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் கே. எஸ். ரவிகுமார் தயாரிப்பில் வெளியானது.

‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படத்தில் விஜய் கனிஷ்காவின் திருப்புமுனை ஏற்படுத்தும் விதமான கதாபாத்திரம் நல்ல விமர்சனங்களையும் ரசிகர்களின் பாராட்டையும் பெற்றது, இதனால் தமிழ் சினிமாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய, திறமையான புதுமுகங்களில் ஒருவராக நிலைநிறுத்தியுள்ளது. கனிஷ்கா திரையில் தோன்றிய விதமும், வசீகரிக்கும் கதை சொல்லலும், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த குறிப்பிடத்தக்க வெற்றியின் மூலம், விஜய் கனிஷ்கா திரைப்படத் துறையில் ஒரு அற்புதமான பயணத்திற்கு தயாராக உள்ளார். அவர் நடிப்பில் வரவிருக்கும் திரைப்படங்களின் ஈர்க்கும் விதமான பட்டியல் தயாராக உள்ளது, அவை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Most Popular

Recent Comments