V4UMEDIA
HomeNewsKollywood20 - ஆண்டுகளுக்குப் பிறகு மறுவெளியீடாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய 'சச்சின்'!

20 – ஆண்டுகளுக்குப் பிறகு மறுவெளியீடாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய ‘சச்சின்’!

சமீப ஆண்டுகளில், கிளாசிக் தமிழ் படங்களை மீண்டும் வெளியிடும் போக்கு வேகம் பெற்றுள்ளது, இதனால் ரசிகர்கள் பெரிய திரையில் தங்களுக்குப் பிடித்த தருணங்களை மீண்டும் அனுபவிக்க முடிகிறது. விஜய்யின் ‘கில்லி’ மறு வெளியீடாகி வெற்றி பெற்றது, இதற்கு ஒரு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ள நிலையில், பழைய ‘பிளாக்பஸ்டர்’ படங்கள் திரையரங்குகளில் மீண்டும் வெளியாவதை ஒட்டிய உற்சாகம் மேலும் அதிகரித்துள்ளது. ‘தளபதி’ விஜய்யின் 2005-ஆம் ஆண்டு வெளியான காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படமான ‘சச்சின்’ ஏப்ரல் 18-ஆம் தேதி உலகமெங்கும் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில்  வெளியானது. இந்த படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியான தருணம் ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தது.

ஏப்ரல் 18-ஆம் தேதி உலகளவில் பிரமாண்டமாக வெளியான ‘சச்சின்’ திரைப்படத்தின் மறு வெளியீட்டு போஸ்டரை  தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ S. தாணு அவர்கள் ஏற்கனவே பகிர்ந்திருந்தார். இந்த மறு வெளியீடானது, ஏப்ரல் 14-2005-அன்று படம் முதலாவதாக வெளியான நாளிலிரூந்து 20 ஆண்டுகளை நிறைவு செய்வது நினைவுகூரத்தக்க ஒரு தருணமாகும். எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் இந்த மறுவெளியீடு; ரசிகர் பட்டாளத்திற்கு ஏற்றவாறு கிளாசிக் விஜய் படங்களை மீண்டும் வெளியிடும் போக்கு அதிகரிக்கிறது.

ஏப்ரல் 2024-ல், விஜய்யின் ‘கில்லி’ படம் மீண்டும் வெளியிடப்பட்டு, அபார வெற்றி பெற்றது, பாக்ஸ் ஆஃபீஸில்  வசூலித்து, மறு வெளியீட்டில் கூட பிளாக்பஸ்டராக அமைந்தது. விஜய்யின் கடந்த கால வெற்றித் திரைப்படங்களை பெரிய திரையில் கண்டுகளிக்க இன்னும் ஏராளமான ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர் என்பதை இந்த அமோக வெற்றி நிரூபித்தது.

இந்த வெற்றியால் உற்சாகமடைந்த ‘சச்சின்’ படத்தின் தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ S. தாணு இப்போது அந்த மாயாஜாலத்தை மீண்டும் உருவாக்கி உள்ளார். இந்த படத்தின் கதை நகரும் விதம், நகைச்சுவை காட்சிகள் மற்றும் இசைக்காக  ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.


மறு வெளியீட்டின் மூலம், விஜய் மற்றும் ஜெனிலியாவின் ஆகியோரின் நடிப்பு, ‘வைகைப்புயல்’ வடிவேலுவின் நகைச்சுவை மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் மனதிற்கு இதமான  இசை ஆகியவற்றை மீண்டும் அனுபவிக்க பார்வையாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குனர்  மகேந்திரன் அவர்களின் மகன் ஜான் மகேந்திரன் இயக்கியுள்ள ‘சச்சின்’ படத்தில் ‘தளபதி’ விஜய், ஜெனிலியா டிஸோசா, பிபாஷா பாசு, ரகுவரன், வடிவேலு, சந்தானம், மயில்சாமி, தாடி பாலாஜி மற்றும்  சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏப்ரல் 18-ஆம் தேதி மீண்டும் வெளியிடப்பட்ட ‘சச்சின்’ வெள்ளித்திரையில் தனது பழைய மேஜிக்கை மீண்டும் உருவாக்கி உள்ளது. உலகமெங்கும் வெளியாகி வசூல் மழை பொழிந்து கொண்டிருக்கிறது ‘சச்சின்’.

Most Popular

Recent Comments