V4UMEDIA
HomeNewsKollywoodமாணவர்களுக்கு உதவி செய்யும் 'ஹிப்ஹாப்' ஆதி!

மாணவர்களுக்கு உதவி செய்யும் ‘ஹிப்ஹாப்’ ஆதி!

ஹிப்ஹாப் ஆதி, பின்தங்கிய மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்தார்.

பன்முகக் கலைஞரும் நடிகருமான ஹிப்ஹாப் ஆதி, ஒரு தனியார் பல்கலைக் கழகத்துடன் இணைந்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளார்.

இந்த முயற்சி எப்படி முன்னெடுக்கப்பட்டது என்பதைப் பற்றி ஆதி கூறுகையில், “சமீபத்தில், நான் ஒரு பல்கலைக் கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றபோது, ​​எனது கலை மற்றும் நேர்காணல்களில் கல்வியின் முக்கியத்துவத்தை நான் ஆதரிப்பதால், தகுதியான மாணவர்களை அழைத்து வர முடிந்தால், தங்கள் கல்லூரியில் அவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறோம் என்று என்னிடம் சொன்னார்கள்.

நானும் எனது குழுவும் திரைத்துறைக்கு நுழைவதற்கு முன்பே, எங்களிடம் ரசிகர் நற்பணி மன்றங்கள் இருந்தன, அவர்கள் பல நலத்திட்ட நடவடிக்கைகளை அடிக்கடி ஏற்பாடு செய்து வந்தனர். இப்போது ஒரு தசாப்தத்திற்கும் மேலாகிவிட்டது, அவர்கள் இன்னும் செயல்பட்டு வருகின்றனர். எனவே, எங்கள் ரசிகர் நற்பணி மன்ற அமைப்பான ஹிப்ஹாப் தமிழா ரசிகர் அறக்கட்டளையை, இதற்காகப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தேன், மேலும் ஒவ்வொரு ஆண்டும் இதைச் செய்கிறேன்.”

எங்களது அறக்கட்டளை எவ்வாறு தகுதியுடைய மாணவர்களை தேர்ந்தெடுக்கும் என்பதை பற்றி அவர் கூறுகையில், “எங்கள் உறுப்பினர்கள் தமிழ்நாடு முழுவதும் சென்று கல்வியைத் தொடர உதவித்தொகை தேவைப்படும் தகுதியான மாணவர்களைத் தேடுந்தேடுப்பவார்கள். உதவித்தொகை தேவைப்படும் எவரும் மதிப்பெண் பட்டியல்கள் போன்ற தேவையான ஆவணங்களுடன் எங்களைத் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு இணையதள பக்கத்தை நாங்கள் தொடங்குவோம். பின்னர் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள எங்கள் அறக்கட்டளை உறுப்பினர்கள் அவர்களைத் தொடர்புகொண்டு, ஆவணங்களை சரிபார்த்து, உண்மையில் ஆதரவு தேவைப்படும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை கல்லூரியுடன் இணைப்பார்கள்” என்று அவர் விளக்கினார்.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள், ஒற்றைப் பெற்றோர் கொண்ட மாணவர்கள், அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் கல்விக் கட்டணம் செலுத்த முடியாதவர்கள் ஆகியோர் இந்த முயற்சியால் பயனடைவார்கள் என்றும் அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்,”உண்மையில், இந்த முயற்சியைப் பற்றி கேள்விப்பட்ட பிறகு, வேறு சில கல்லூரிகளும் எங்களைத் தொடர்பு கொண்டு, அவர்களின் உதவித்தொகை திட்டங்களைக் கொண்டு எங்களுடன் இணைந்து மாணவர்களுக்கு உதவ விரும்புகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

Most Popular

Recent Comments