தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கேளிக்கை சமையல் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு அறிமுகமான மோனிஷா பிளஸ்சி. ‘மாவீரன்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். அப்படத்தில் சிவகார்த்திகேயன் தங்கையாகவே வாழ்ந்திருப்பார் என்றும் கூறலாம்.

சமீபத்தில் மோனிஷா நடித்த ‘சுழல்-2’ வெப் தொடர் OTT தளத்தில் வெளியாகி பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்நிலையில் அவர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்திலும், ‘தளபதி’ விஜய்யுடன் H.வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படத்திலும் நடித்துள்ளார். இதன் காரணமாக மோனிஷா பிளஸ்சி உற்சாக மிகுதியில் உள்ளார்.