‘லூசிஃபர் – 2: எம்புரான்’ படத்தின் டிரெய்லரை முதன்முதலில் பார்த்த ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், அதைப் பெரிதும் பாராட்டியதற்கு பிருத்விராஜ் சுகுமாரன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு நன்றியைத் தெரிவித்துள்ளார்.

‘L2: எம்புரான்’ படத்தின் டீஸர் கடந்த ஜனவரி 26-ஆம் தேதி அன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் கடந்த மார்ச் 15 – ஆம் தேதி அன்று ஆசீர்வாத் சினிமாஸ் X-வலைத்தளப் பக்கத்தில், இப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தது. அது மட்டுமின்றி, கடந்த மார்ச் 16 – ஆம் தேதி அன்றும் X-வலைத்தளப் பக்கத்தில், இப்படத்திற்கான முதல் நாள் முதல் காட்சி இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு தொடங்கும் என்று அறிவித்ததும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் பற்றிக் கொண்டது.
‘L2 : எம்புரான்’ படத்தின் டிரெய்லரை முதன்முதலில் பார்த்த ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், அதைப் பெரிதும் பாராட்டியதற்கு பிருத்விராஜ் சுகுமாரன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் உடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு நன்றியைத் தெரிவித்துள்ளார். மோகன்லால் நடித்து பிருத்விராஜ் இயக்கியுள்ள இந்தப் படம், வரும் மார்ச் 27 – ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது. இப்படம் அதிரடி மற்றும் அரசியல் கொண்ட ஸ்டீஃபன் நெடும்பள்ளி என்ற கதாபாத்திரத்தின் உலகத்தை பற்றி விவரிக்கிறது.

‘L2: எம்புரான்’ என்பது லூசிஃபர் படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அடுத்த பாகமாகும், இப்படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். லூசிஃபர் படத்தின் தொடர்ச்சியாக வெளியாகியுள்ள ‘L2: எம்புரான்’ திரைப்படம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றிய மோகன்லால், ‘ஜெயிலர்-2’ படத்திலும் இடம்பெற வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


‘L2: எம்புரான்’ வரும் மார்ச் 27-ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது, மேலும் மோகன்லால் ஸ்டீஃபன் நெடும்பள்ளியாக அழுத்தமான வேடத்தில் மீண்டும் நடிக்கிறார். இந்தப் படத்தில் பிருத்விராஜ், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன் மற்றும் ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முரளி கோபி திரைக்கதை எழுதியுள்ள ‘L2: எம்புரான்’ திரைப்படம் மோகன்லாலின் கதாபாத்திரத்தின் உலகளாவிய நிழல் உலக தொடர்புகளை விவரித்து, அவரது மர்மமான கடந்த காலத்தை வெளிப்படுத்தி, அதிகாரத்திற்கு உயருவதைப் பற்றி கதை வடிவமைக்கப் பட்டிருக்கிறது. இப்படத்திற்கு தீபக் தேவ் இசையமைத்துள்ளார், சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.