‘இரண்டு வானம்’ படத்தின் மூலமாக 3 – ஆவது முறையாக இணையும் விஷ்ணு விஷால், ராம்குமார் கூட்டணி!
‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ போன்ற வெற்றிப் படங்களுக்கு பிறகு இயக்குனர் ராம்குமார்; நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் கூட்டணியில் புதிய படமொன்று தயாராகி வந்தது. அதற்கு ‘இரண்டு வானம்’ என தலைப்பு வைக்கப்பட்டதாக முதல் தோற்றத்துடன் படக்குழு அறிவுப்பு ஒன்றை வெளியிட்டனர். இதில் கதாநாயகியாக மலையாள திரையுலகின் ஜொலிக்கும் ‘மமிதா பைஜூ’ நடிக்கிறார். “மரகத நாணயம்” படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமான திபு நைனன் தாமஸ் இசையமைத்துள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். முன்னதாகவே இதன் பெரும்பாலான படப்பிடிப்பை ஊட்டியில் நடத்தியுள்ளனர். இப்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்கிறார்கள்.

இயக்குனர் ராம்குமார், நடிகர் விஷ்ணு விஷால் கூட்டணியில் முதலாவதாக உருவான ‘முண்டாசுப்பட்டி’ படம் காமெடியாகவும், இரண்டாவதாக உருவான ‘ராட்சசன்’ படம் திரில்லராகவும் வெளிவந்த நிலையில், 3-ஆவது படமான ‘இரண்டு வானம்’, காதல் கதையாக வெளிவரவுள்ளது.


மமிதா பைஜூ “பிரேமலு” படத்தின் மூலமாக தமிழ் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தார். மேலும் மரகத நாணயம், கனா, பேச்சுலர், ARM, சித்தா, டீசல் போன்ற பல படங்கள் மூலமாக டிரெண்டிங் பாடல்களை இசையமைத்த திபு நைனன் தாமஸ், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் அருண்ராஜா காமராஜாவுடன் ஒரே கல்லூரியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


படம் வெளியீடு குறித்த தகவல்கள் அடுத்தடுத்து அதிகாரப் பூர்வ்மாக வெளியாகும்.