அவ்னி மூவிஸ் – பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா ஆகிய நிறுவனங்கள், கற்பனையான காதல் நகைச்சுவை கலந்த அடுத்த திரைப்படத்தின் முக்கியமான படப்பிடிப்பு பாரம்பரியமான பூஜை விழாவுடன் தொடங்கியதாக அறிவித்துள்ளன. இந்த படத்தின் மூலம் அஸ்வின் கந்தசாமி இயக்குனராக அறிமுகமாவதுடன், இந்த படத்தில் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் பியோன் சுர்ராவ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கின்றனர்.


படத்தின் தலைப்பு ஆச்சரியப்படத் தக்க வகையில் விரைவில் அறிவிக்கப்படும். இந்த திரைப்படம் நகைச்சுவை, காதல் மற்றும் மிகவும் வலுவான கற்பனை ஆகியவற்றின் தனித்துவமான கலவையாகவும், அனிமேஷனில் காணப்படும் மிகவும் விசித்திரமான மற்றும் அதை விடவும் நிஜ வாழ்க்கையில் நடக்காதவற்றை விவரிக்கும் கதையைக் கொண்டதாக இருக்கும். படத்தின் கதையம்சம் இரண்டு மாறுபட்ட யதார்த்தங்களை கொண்டு செல்லும் ஒரு கதாபாத்திரத்தைப் பற்றியது, மேலும் நகைச்சுவை மற்றும் இதயப்பூர்வமான உணர்ச்சியை பரஸ்பரம் தடையின்றி வெளிப்படுத்தும் படமாகவும் இது இருக்கும். கிராமப்புற வசீகரத்திலிருந்து நகர்ப்புற வாழ்க்கை முறைக்கு மாறும் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்தப் படம், சுய-தேடல் மற்றும் உறவுகளுக்கான புதிய மற்றும் வழக்கத்திற்கு மாறான அணுகுமுறையுடன் கூடிய காதல், இலட்சியம் மற்றும் அடையாளம் ஆகியவற்றின் கருப்பொருள்களை பற்றி விவரிக்கிறது.


‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இளம்வயது ஆதித்த கரிகாலனாக நடித்து தாக்கத்தை ஏற்படுத்திய சந்தோஷ் அதிலிருந்து மாற்றம் பெற்று, ஒரு சவாலான முதன்மையான கதாபாத்திர நடிப்பின் மூலம், வளர்ந்து வரும் திறமையாளராக தனது பன்முகத்திறனை வெளிப்படுத்தவுள்ளார். ‘ரசவாதி’ படத்தில் தனது அற்புதமான நடிப்பிற்காக அறியப்பட்ட ரேஷ்மா வெங்கடேஷ், பல்வேறு கதாபாத்திரங்களை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், அதே போல ‘நான் மகான் அல்ல’ மற்றும் ‘அந்தகாரம்’ போன்ற படங்களில் தனது குறிப்பிடத்தக்க நடிப்பிற்காக பாராட்டப்பட்ட வினோத் கிஷன், படத்தின் சிக்கலான நகைச்சுவை காட்சிகளுக்கு தனது தனித்திறன் மூலம் முழுப்பங்களிப்பையும் அளிக்கவுள்ளார். வசீகரம் மற்றும் உணர்ச்சிமிக்க கலவையுடன் சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் ‘டாக்டர்’ படத்தின் மூலம் தனது நடிப்பு மற்றும் உடல்மொழியால் மக்களை ரசிக்கவைத்த பியோன் சுர்ராவ் போன்ற துடிப்பான நடிகர்களை கொண்ட படம்.


‘R S இன்போடேயின்மெண்ட்’, ’24AM ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘ஒரு ஊரிலே ஒரு பிலிம் ஹவுஸ்’ போன்ற முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் உதவி இயக்குநராகவும், நிர்வாக தயாரிப்பாளராகவும் பல தசாப்தங்களாக பணிபுரிந்த அனுபவமுள்ள இயக்குனர் அஸ்வின் கந்தசாமி, இந்த படத்தில் அறிமுகமாவதின் மூலம் தனது தொலைநோக்குப் பார்வைக்கு உயிரூட்டுகிறார்.
படத்தை பற்றிய மேலதிக தகவல்கள் அதிகாரப்பூர்வமாக படக்குழு சார்பில் வெளியிடப்படும்.