V4UMEDIA
HomeGalleryEventsஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அவரது இல்லத்தில் மரியாதை செலுத்திய 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த்!

ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அவரது இல்லத்தில் மரியாதை செலுத்திய ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த்!

மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த், புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக நடிகர் ரஜினிகாந்தை ஜெ.தீபா, அவரது கணவர் உள்ளிட்ட உறவினர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

அதன் பிறகு செய்தியாளர்கள சந்தித்த அவர், முதலாவதாக அவருடன் படம் நடிப்பதைப் பற்றிய பேச்சுவார்த்தைக்காகவும், இரண்டாவதாக ராகவேந்திரா மண்டபம் திறப்பு விழாவிற்கு அழைப்பதற்காகவும், மூன்றாவதாக தனது மகள் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காகவும், தற்போது நான்காவது முறையாக வருவதாகவும் கூறினார்.

அவர் இங்கே இல்லையென்றாலும் அவருடைய நினைவுகள் அனைவரது மனதிலும் எப்பொழுதும் இருக்கும் என்றும், அவருக்கு இங்கே அஞ்சலி செலுத்தி, அவரைப் பற்றிய இனிமையான நினைவுகளுடன் செல்வதாகவும் கூறினார்.

Most Popular

Recent Comments