Home PR News Celebrities அஜித்குமாரை வாழ்த்திய ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்!

அஜித்குமாரை வாழ்த்திய ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்!

தமிழ்த் திரையுலகில் 31-ஆண்டுகளுக்கும் மேல் 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் அஜித்குமார் அவர்கள் பலதரப்பட்ட கதையம்சம் கொண்ட திரைப்படங்களின் அளித்ததன் மூலம் தனி முத்திரைப் பதித்துள்ளார்.

சினிமாவில் மாபெரும் வெற்றிப் படங்களை அளித்து சினிமா ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே மிகப் பெரிய திரைப் பிரபலமாகவும், சிறந்த ஆளுமையாகவும், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராகவும் திகழ்கிறார்.

சினிமா மட்டுமின்றி பிற துறைகளிலும் கால் பதித்துள்ளார். இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன பந்தயங்களிலும் ஈடுபட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் 2018-ஆம் ஆண்டு மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ட்ரோன் சம்பந்தமான ஒரு ஆராய்ச்சி ஆலோசகராக பணிபுரிந்தார்.

இந்த 2024-2025 சீசனில் துபையில் நடைபெறும் 24H சீரிஸ் எனப்படும் நான்கு சக்கர வாகனப் பந்தயத்தில் 992 பிரிவில், தனது ‘அஜித் குமார் ரேசிங்’ எனும் அணியின் சார்பில் பங்கேற்று மூன்றாமிடம் பெற்று சாதித்துள்ளார். இதற்கு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்கள் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் ” அன்புள்ள அஜித்குமாருக்கு வாழ்த்துக்கள்! நீங்கள் சாதித்து விட்டீர்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்” என்று வாழ்த்தியுள்ளார். அவரைப் போல கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் மற்றும் முக்கியமான அரசியல் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.