தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி, இந்தியத் திரையுலகில் தனக்கென தனிபாணியை அமைத்துக் கொண்டு ‘ஜப்பான்’ உள்பட உலகமெங்கும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்தின் 170-வது படமாக ‘வேட்டையன்’ கடந்த அக்டோபர் 05-ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் பிரம்மாண்ட தயாரிப்பில், ‘ஜெய்பீம்’ புகழ் த.செ. ஞானவேல் எழுத்து மற்றும் இயக்கத்தில், இளைஞர்களின் இதயத் துடிப்பை எகிர வைக்கும் இசையமைப்பாளரான அனிருத் அதிரடியான இசையில் வெளியாகி 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து 25-நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கிறது.
இத்திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக திகழும் ‘பாலிவுட் சூப்பர் ஸ்டார்’ அமிதாப் பச்சன் இணைந்து பிரமாதமாக நடித்திருந்தார். அனைத்து மொழி ரசிகர்களாலும் கொண்டாடப்படும் நடிகர்களான ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி மற்றும் கிஷோர் ஆகியோரும் நடித்திருந்தனர்.
ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியரும், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். ஜி எம் சுந்தர், ராவ் ரமேஷ், ரமேஷ் திலக், ரக்ஷன் ஆகியோரும் தங்களது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தனர்.
இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு இயக்குனராக SR கதிரும், படத்தொகுப்பாளராக பிலோமின் ராஜும் சிறப்பாக பணியாற்றி இருந்தனர். கலை இயக்கத்தை K கதிர் மற்றும் சக்தீ வெங்கட்ராஜும், சண்டைப் பயிற்சி இயக்கத்தை இரட்டையர் அன்பறிவும், நடன இயக்கத்தை தினேஷும் மேற்கொண்டு தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருந்தனர்.
தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பு நிர்வாகிகளாக KR பாலமுருகன் மற்றும் தம்பி M பூபதி, நிர்வாக தயாரிப்பாளராக சுப்ரமணியன் நாராயணன், நிர்வாக தலைமையாளராக G.K.M. தமிழ் குமரன் ஆகியோரும் தங்களது பணியை செவ்வனே மேற்கொண்டு படம் வெற்றியடைய உறுதுணையாக இருந்தனர்.
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்கள் தனது திரை வாழ்வில் 50-ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள நிலையில் அவரது 170-வது திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.