தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ‘தளபதி விஜய்’ அவர்களின் அறிவுறுத்தலின்படி,

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்காக தென் சென்னை தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக சென்னை சூர்யா பார்ட்டி ஹாலில் கழக பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஒவ்வொருவரையும் 27/10/2024-அன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிர வாண்டியில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ளும்படி நேரடியாக அழைப்பு விடுத்தார். மேலும் கழக பொதுச்செயலாளர் தலைமையில் மாநாடு சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கழக நிர்வாகிகளுக்கும் மதிய உணவு வழங்கினார்.
இக்கூட்டத்தில் தென்சென்னை தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் திரு.தாமு, திரு.உதயா, திரு. பிரசாந்த் மற்றும் கழக தொண்டர்கள், தோழர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.