
பன்முகம் கொண்ட ‘தனுஷ்’ இயக்கி,நடித்துள்ள ‘ராயன்’ திரைப்படம் முதல் நாளிலயே ரூ.12 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதோடு மட்டுமல்லாமல், உலகம் முழுக்க வசூல் சாதனை புரிந்து வருகிறது. படம் வெளியாகி அவரது மற்ற அனைத்து திரைப்படங்களின் சாதனைகளையும் முறியடித்துள்ளது.

தனது 50-வது படத்தை தனுஷே இயக்கி,நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படம் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன், திலீபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


கடந்த மாதம் ஜூலை 26, வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் இடம் பெற்றுள்ள அதீத வன்முறைக் காட்சிகள் விமர்சனத்துக்கு உள்ளாகினாலும், கலவையான விமர்சனங்களுடன் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று வசூல் சாதனை புரிந்து வருகிறது.

படத்தின் கதை,திரைக்கதை, இசை, ஓளிப்பதிவு, சண்டைக் காட்சி அமைப்புகள் மற்றும் கலை இயக்கம் போன்றவை சிறப்பாக அமைந்ததால் படத்தின் உருவாக்கம் ரசிகர்களை கவர்ந்தது. இத்திரைப்படத்தில் ஓளிப்பதிவாளராக ஒம்பிரகாஷும், சண்டைப் பயிற்சி இயக்குனராக பீட்டர் ஹெய்னும், கலை இயக்குனராக ஜாக்கியும் தங்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

இப்படம் ரூ.80 முதல் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது. படம் வெளியாகி முதல் 7 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.102 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை புரிந்துள்ளதாக திரைவட்டாரங்களில் கூறப்படுகிறது. தமிழ்நாடு பாக்ஸ் ஆஃபீஸில் மட்டும் ரூ.50 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இத்திரைப்படத்தின் திரைவிமர்சனம் இதோ:-