
பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவரான தனுஷ் அவர்களின் 51-வது படமாக உருவாகிறது குபேரா. தமிழ், தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ‘பான் இந்திய’ திரைப்படமாக இந்தப்படம் வெளியாக இருக்கிறது.தேசிய விருது வென்ற தெலுங்கு திரையுலக இயக்குனர் திரு. சேகர் கம்முலா இத்திரைப்படத்தை இயக்குகிறார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார்.’கிங்’நாகர்ஜூனா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்கள் மூலம் சுனில் நரங் மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் தயாரிக்க, சோனாலி நரங் வழங்குகிறார்.
இத்திரைப்படத்திற்கு தேவிஶ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார்.ராமகிருஷ்ணா சபானி மற்றும் மோனிகா நிகோத்ரே ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பைக் கவனிக்க, சர்வதேச சண்டைப் பயிற்சி இயக்குநரான யானிக் பென் சண்டைக் காட்சிகளை மேற்பார்வையிடுகிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் தொடர்ந்து நடைபெற்றது. தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. அதில் ஒரு பகுதியாக திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. மும்பையில் நடக்கும் படப்பிடிப்போடு ராஷ்மிகா மந்தனா சார்ந்த காட்சிகள் முடிவடைந்தன. தொடர்ந்து அனைத்து கட்ட படப்பிடிப்பு வேலைகளும் விரைவில் நிறைவுற்று, படத்தின் தயாரிப்புக்கு பிந்தைய பணிகள் துவங்க உள்ளது.