இயக்குனர் பாலா இயக்கத்தில் ‘வனங்கான்’ என்ற திரைப்படத்தில் ‘அருண் விஜய்’ நடித்துக் கொண்டிருந்தார். படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. அருண் விஜய்க்கு ஜோடியாக ரேவதி பிரகாஷ் நடித்துள்ளார். அடுத்ததாக ‘மான் கராத்தே’ திரைப்படத்தின் இயக்குனர் ‘கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் நடிக்கப் போகிறார். ‘தன்யா ரவிச்சந்திரன்’, ‘சித்தி இட்னானி’ நாயகிகளாக இதில் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்திற்கு சாம். சி. எஸ் இசையமைக்கிறார், மற்றும் தயாரிப்பு நிறுவனம் பி டி ஜி யுனிவர்ஸ் சார்பில் ‘பாபி பாலச்சந்திரன்’ அவர்கள் தயாரிக்கிறார் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இத் திரைப்படம் தொடர்பான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இத்திரைப்படத்திற்கு ‘ரெட்ட தல’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இதன் தலைப்பு வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.