பல சூப்பர் ஹீரோக்களின் உலகம் காக்கும் பிரம்மாண்டமான கதைகளை திரையில் வெளியிடும் நிறுவனம் ‘மார்வல்’. இந்த நிறுவனம் ‘டெட்பூல்’ & ‘வூல்வரின்’ திரைப்படத்தின் திரை முன்னோட்டத்தை வெளியிட்டனர். ’20த் செஞன்சுரி ஃபாக்ஸ்’ நிறுவனத்திடம் காப்புரிமைகள் இருந்ததால் பல வருடங்களாக மார்வல் படங்களில் இடம்பெறாமல் இருந்தது.
20த் செஞன்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தை ‘டிஸ்னி’ வாங்கி விட்டதால் இந்த ‘எக்ஸ் மேன்’ கதாபாத்திரங்களை இனி மார்வெல் படங்களில் காணலாம். ‘லோகன்’ படத்திற்குப் பிறகு வூல்வரின் & டெட்பூல் கதாபாத்திரங்கள் மார்வல் உலகத்தில் வந்துள்ளது. இத்திரைப்படத்தின் திரை முன்னோட்டத்தை மார்வெல் நிறுவனம் வெளியிட்டனர்.
வேற்றுலக கதை களத்தை கையில் எடுத்துள்ளனர் இதில் பல சூப்பர் ஹீரோ கதைகளுக்கான இருப்பிடமாகவும் இருக்கிறது. தனது உலகத்தில் வெறுக்கப்படும் நபராக மாறிப் போய் இருக்கிறார் வூல்வரின், அவரிடமும் உலகை காக்க உதவி கேட்டு வருகிறார் டெட்பூல் இதில். ஏற்படும் மன குழப்பங்கள், பிரச்சனைகள், இருவருக்கும் சண்டை, போல இத் திரைப்படம் ஆக்சன் நிறைந்த காட்சிகளுடன் இருக்கிறது. டெட்பூல் கதாபாத்திரம் மிகவும் அட்டகாசம் செய்பவர் ஆவார் மார்வெல் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படம் வரும் ஜூலை 26 திரையரங்குகளில் வெளியாகிறது.
டெட்பூல் & வூல்வரின் ட்ரெய்லர்