V4UMEDIA
HomeBox Office'கில்லி'க்கு குவியும் வசூல், விஜய்யின்  அசத்தலான நடிப்பு!

‘கில்லி’க்கு குவியும் வசூல், விஜய்யின்  அசத்தலான நடிப்பு!

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘விஜய்’ நடித்த ‘கில்லி’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. திரைப்படத்தின் வசூல் ‘கோடிகளில்’ இருக்கலாம் என்பதை படத்தை வெளியிட்ட ‘சக்திவேல் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி இயக்குனர் ,தரணி, இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான படம் கில்லி. விஜய்யின் பட வரிசைகளில் முக்கியமான படமாக இத்திரைப்படம் அமைந்துள்ளது. இதில் ‘திரிஷா’, ‘பிரகாஷ்ராஜ்’ உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ‘வித்யாசாகர்’ இசையமைத்திருக்கிறார் இப்படத்தில் வசூல் நிலவரம் விஜயின் திரைப்படத்திற்கான வியாபாரத்தை உயர்த்தியது. இத் திரைப்படம், 4-கே டிஜிட்டல் தொழில்நுட்ப தரத்தில் மெருகூட்டப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு 500 திரையரங்குகளில் படத்தை வெளியிட்டுள்ளனர். திரையரங்குகள் விழாக்கோலம் அடைந்தது. எல்லாம் திரையரங்குகளிலும் கில்லி திரைப்படம் ஹவுஸ்புல் ஆனது. படத்தை வெளியிட்ட சக்தி வேலன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் “கில்லி முதல் நாள் வசூல் மட்டுமே சில கோடிகள் அல்ல பல கோடிகளை பெற வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Most Popular

Recent Comments