Home Gallery Celebrities ‘ஓ மை கடவுளே’ பட இயக்குனருடன் இணைந்த ‘பிரதீப் ரங்கநாதன்’

‘ஓ மை கடவுளே’ பட இயக்குனருடன் இணைந்த ‘பிரதீப் ரங்கநாதன்’

‘அஸ்வத் மாரிமுத்து’ இயக்கத்தில் ‘பிரதீப் ரங்கநாதன்’ நாயகனாக நடித்து, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படம் அவர்களின் 26-வது படமாகும். ‘லவ் டுடே’ படத்தின் வெற்றிக்குப் பின் மீண்டும் ஏஜிஎஸ் நிறுவனமும், ‘பிரதீப் ரங்கநாதனும்’ இத்திரைப்படத்தில் இணைகின்றனர்.

கடந்த 2020-ஆம் ஆண்டில் ‘அஸ்வத் மாரிமுத்து’ இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்து மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘ஓ மை கடவுளே’. இதன் வெற்றிக்குப் பின் ‘அஸ்வத் மாரிமுத்து’ இயக்கும் திரைப்படம் இத்திரைப்படமாகும். ‘லியோன் ஜேம்ஸ்’ இதற்கு இசை அமைக்கிறார்.

இத்திரைப்படத்தின் அறிவிப்பிற்காக காணொளி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர். ‘பிரதீப் ரங்கநாதன்’ மற்றும் அஸ்வத் மாரிமுத்துவின் நிஜ வாழ்க்கையில் நடந்த நடப்பை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள நகைச்சுவை காணொளியாக இது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.