‘அனிமல்’ படத்துக்கு பிறகு இயக்குனர் ‘சந்தீப் ரெட்டி வங்கா’,’பிரபாஸுடன்’ இணையும் படம் ‘ஸ்பிரிட்’.இந்தத் திரைப்படத்தின் 60% ஸ்கிரிப்டை அவர் முடித்துள்ளதாகவும் படப்பிடிப்பு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் தொடங்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
பிரபாஸும் நானும் இணையும் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 150 கோடியாக இருக்கும் என இயக்குனர் ‘சந்தீப் ரெட்டி வங்கா’ நம்பிக்கை தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் இயக்கிய ‘அனிமல்’ திரைப்படம் 800 கோடிகளுக்கு மேலான வசூலை குவித்துள்ளது.
இந்நிலையில் எல்லாம் சரியாக நடந்தால் படத்தில் முதல் நாள் வசூல் 150 கோடியாக இருக்கும் இதுவும் ஒரு வர்த்தக கணக்கீடு என்றார். செயற்கைக்கோள் மற்றும் டிஜிட்டல் உரிமம் மூலமாகவே பட்ஜெட்டை மீட்டெடுத்து விட முடியும் என்றார்.