ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் பிரம்மாண்ட தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி’விஜய் நடிக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'(The G.O.A.T) படத்தின், படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

படத்தில் இருந்து முதல் தோற்றம் மற்றும் இரண்டாம் தோற்றம் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ எக்ஸ் வளைத்தள பக்கத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.


இந்தாண்டு ஜனவரியில் தைப்பொங்கலை முன்னிட்டு படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்களான பிரசாந்த்,பிரபுதேவா, அஜ்மல் ஆகியோருடன் ‘தளபதி’விஜய் இருப்பது போன்ற மிரட்டலான மூன்றாவது தோற்றம் வெளியானது.

படத்தின் ‘கிளிம்ப்ஸ்’ காணொளி தமிழ்ப் புத்தாண்டையொட்டி வெளியாகலாம் என்ற அதிகாரப் பூர்வமற்ற தகவல் உலாவுகிறது.


இதனிடையே படத்தின் படப்பிடிப்பிற்காக ‘தளபதி’விஜய் கேரளாவிற்கு சென்றிருந்தார்.அங்கே ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றார்.அவர்களின் அதீத அன்பினால் நெகிழ்ந்து போனார். இதனிடையே தற்போது ‘தி கோட்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக ‘தளபதி’விஜய் அவர்கள் இன்று சென்னையிலிருந்து துபாய் புறப்பட்டுச் சென்றார்.