இயக்குனர் ‘ஹரி’ இயக்கத்தில் ‘விஷால்’ கதாநாயகனாகவும், ‘பிரியா பவானி சங்கர்’ கதாநாயகியாகவும் நடிக்கும் திரைப்படம் ‘ரத்னம்’. இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இத்திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் ‘யோகி பாபு’, இயக்குனர் ‘கௌதம் மேனன்’, ‘சமுத்திரக்கனி’, போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு இறங்கியுள்ளது. இதற்கான விளம்பர வாகனத்தை தொடங்கி வைக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

இத்திரைப்படம் இயக்குனர் ஹரியின் 17-வது திரைப்படம் ஆகும்.அவரது ‘சாமி’, ‘சிங்கம்’ திரைப்படங்களுக்கு பிறகு சிறந்த ‘ஆக்சன்’ திரைப்படத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்ததாகவும், அதை இப்படத்தில் சாத்தியப்படுத்தியுள்ளதாகவும் இயக்குனர் ஹரி கூறியுள்ளார்.