V4UMEDIA
HomeGalleryCelebritiesபிரபல நகைச்சுவை நடிகர் விஸ்வேஷ்வர ராவ் உடல் நலக்குறைவால் காலமானார்!

பிரபல நகைச்சுவை நடிகர் விஸ்வேஷ்வர ராவ் உடல் நலக்குறைவால் காலமானார்!

நகைச்சுவை நடிகர் விஸ்வேஷ்வர ராவ் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இவருக்கு வயது 62. தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராக புகழ் பெற்றவர். இவர் தனது ஆறு வயதில் இருந்தே நடிக்க தொடங்கி விட்டார்.

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படத்தில் லைலாவின் அப்பாவாக நடித்திருப்பார் மற்றும் இயக்குனர் விக்ரமன் இயக்கிய உன்னை நினைத்து படத்தில் துணை நடிகராக நடித்திருப்பார். இதுவரை 350-க்கும் மேற்பட்ட படங்களிலும் சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

விஸ்வேஷ்வர ராவின் உடல் சென்னைக்கு அருகே உள்ள சிறுசேரியில் இருக்கும் அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் நாளை நடைபெற இருக்கின்றன.நமது V4U மீடியா, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது.

Most Popular

Recent Comments