Home News Bollywood தெலுங்கானாவில் திருமணம் செய்து கொண்ட சித்தார்த் மற்றும் அதிதி ராவ்!

தெலுங்கானாவில் திருமணம் செய்து கொண்ட சித்தார்த் மற்றும் அதிதி ராவ்!

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சித்தார்த் தயாரிப்பு மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சித்தா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்றை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியன்-2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்து, பின்பு பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்தில் நடிகராக அறிமுகமாகி, ஆயுத எழுத்து படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக நடித்து பின்பு ஜிகர்தண்டா, ஜில் ஜங் ஜக், சித்தா போன்ற வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

இதனிடையே பிரஜபதி என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமாகி,ராக் ஸ்டார், மர்டர் 3, பத்மாவத் போன்ற பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.தமிழில் காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம், சைக்கோ போன்ற  திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான நடிகையாக உள்ளார்.

2021-ஆம் ஆண்டு இருவரும் மகா சமுத்திரம் எனும் தெலுங்கு படத்தில் இணைந்து பணிபுரிந்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது என சொல்லப்படுகிறது.தெலுங்கானாவில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோவிலில் இன்று இவர்களது திருமணம் நடந்து முடிந்ததாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2009-ஆம் ஆண்டில் அதிதி ராவ், சத்ய தீப் மிஸ்ரா என்ற பாலிவுட் நடிகருடன் திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு 2013-ஆம் ஆண்டு விவகாரத்து செய்தார்.சித்தார்த் 2003-ஆம் ஆண்டு மேக்னா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு 2007-இல் விவாகரத்து பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.