
தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட வசூலை வாரிக் குவிக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய் அவர்களின் 68-வது படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் கேரளாவில் ‘தளபதி’ விஜய் ரசிகர்களின் அதீத அன்பிற்கு நடுவே பரபரப்பாக நடைபெற்று முடிந்தது.

படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதால் படத்தைப் பற்றிய அடுத்தகட்ட அறிவிப்புகளை கேட்டு தளபதி ரசிகர்கள் இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு அன்புத் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த அன்புத் தொல்லையை பொறுக்க முடியாமல், அதற்கு பதில் அளிக்கும் விதமாக இயக்குனர் வெங்கட் பிரபு நேற்று தனது சமூக வலைத்தளத்தின் வாயிலாக,’சற்று பொறுமை காக்குமாறும், சிறப்பான அடுத்த கட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும்’ என்று ஒரு பதிவின் மூலம் ‘தளபதி’ விஜய் அவர்களின் ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த பதிவின் இணைப்பு இதோ!