60-ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு, சினிமாவின் அனைத்துத் துறைகளிலும் தனது பங்களிப்பை அளித்து மாபெரும் ரசிகர் பட்டாளத்தை தன்னகத்தே கொண்டுள்ள தலைசிறந்த கலைஞன் ‘உலக நாயகன்’கமல்ஹாசன் ஆவார்.தற்போது மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவராகவும் கமல்ஹாசன் உள்ளார்.

அவரின் இந்தியன்-2 மற்றும் இந்தியன்-3 ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும், ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்தியன்-2 படப்பிடிப்பு முடிந்த நிலையில், அதன் படப்பிடிப்பிற்கு பிந்தைய பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதைத்தொடர்ந்து இந்தியன்-3 படத்தின் படப்பிடிப்பிற்கு பிந்தைய பணிகள் நடைபெறும் என கூறியுள்ளார்.
அடுத்து ‘பான் இந்திய’ திரைப்படமாக உருவாகும் ‘கல்கி-2898(ஏ.டி) படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

இதற்கிடையே ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனதால் ‘துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் படத்திலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு தரப்பிலிருந்து கூடிய விரைவில் வெளியாகலாம்.