V4UMEDIA
HomeNewsKollywoodதனுஷ் நடிப்பில் உருவாகும் 'இசைஞானி' இளையராஜா அவர்களின் வாழ்க்கை வரலாறு!

தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘இசைஞானி’ இளையராஜா அவர்களின் வாழ்க்கை வரலாறு!

தேனி மாவட்டம் பண்ணைபுரம் என்ற ஊரில் 02/06/1943-அன்று பிறந்தவர் இளையராஜா அவர்கள். பாவலர் வரதராஜன் மற்றும் கங்கை அமரன் ஆகிய இருவரும் அவரது சகோதரர்கள் ஆவர். ஆரம்ப காலங்களில் ‘பாவலர் சகோதரர்கள்’ என்ற பெயரில் இசைக்குழுவை சகோதரர்கள் மூவரும் நடத்தி வந்தனர்.1976- ஆம் ஆண்டு வெளிவந்த அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக இளையராஜா அறிமுகமானார். இத்திரைப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமானது.தமிழ் சினிமா இசையின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் இளையராஜா அவர்கள் கடந்த 5 தலைமுறைகளாக இசை பயணத்தில் இருக்கிறார்.

தற்போது அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இத்திரைப்படத்தில் இளைஞர்களின் ஆதர்ச நாயகர்களில் ஒருவராக விளங்கும் ‘தனுஷ்’ அவர்கள் ‘இளையராஜா’வாக நடிக்கிறார். இத்திரைப்படத்திற்கு ‘இளையராஜா’வே இசையமைக்கிறார். சமீபத்தில் தனுஷை வைத்து ‘கேப்டன் மில்லர்’ எனும் மாபெரும் வெற்றிப் படத்தை அளித்த அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.கனெக்ட் மீடியா,பிகே பிரைம் புரொடக்ஷன் மற்றும் மெர்க்குரி மூவீஸ் சார்பில் ஸ்ரீராம் பக்திசரண்,சி.கே.பத்ம குமார், வருண் மாத்தூர்,இளம்பருதி,கஜேந்திரன்,சௌரப் மிஷ்ரா ஆகியோர் தயாரிக்கின்றனர்.நீரவ் ஷா அவர்கள் ஒளிப்பதிவையும் முத்துராஜ் அவர்கள் கலை இயக்கத்தையும் மேற்கொள்கின்றனர்.

இந்தப் படத்தின் அறிமுக விழா கடந்த 20/03/24-அன்று சென்னையில் நடைபெற்றது.இவ்விழாவில் ‘உலக நாயகன்’ கமலஹாசன், ‘இசைஞானி’ இளையராஜா, நடிகர் தனுஷ், இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர் வெற்றிமாறன், இயக்குனர் அருண் மாதேஸ்வரன், தியாகராஜன் குமாரராஜா மற்றும் பல முன்னணி திரையுலக கலைஞர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றத்தை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் வெளியிட தனுஷ் மற்றும் இளையராஜா அவர்கள் பெற்றுக் கொண்டனர்.

படம் தொடர்பான மேலதிக தகவல்கள் ஒவ்வொன்றாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவால் வெளியிடப் படும்.

Most Popular

Recent Comments