தமிழ்த் திரையுலகை தனது திரைப்படங்களின் உச்சக் கட்ட வசூல் மூலம் ஆண்டு கொண்டிருக்க கூடிய முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய் அவர்களின் 68-வது படமாக உருவாகிக் கொண்டிருக்கக் கூடிய தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் [The Greatest Of All Time(G.O.AT)]படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக தளபதி விஜய் அவர்கள், தனது அரசியல் கட்சி தொடங்கிய பிறகு கேரளாவிற்கு 9 ஆண்டுகளுக்குப் பிறகு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இத்திரைப்படமானது தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ்.அகோரம் அவர்களின் தயாரிப்பில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபு அவர்களின் இயக்கத்தில் உருவாகிறது.

இத்திரைப்படத்தில் பிரசாந்த்,பிரபுதேவா,மோகன்,ஜெயராம்,சினேகா,லைலா, மீனாட்சி சவுத்ரி,யோகிபாபு,VTV கணேஷ்,அஜ்மல் அமீர்,வைபவ்,பிரேம்ஜி.அரவிந்த் ஆகாஷ்,அஜய்ராஜ் மற்றும் பல முன்னணி நடிகர்களும் பணியாற்றுகின்றனர்.

தொழில்நுட்பக் குழுவைப் பொறுத்தவரை, படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க,சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார்.ராஜீவன் கலை இயக்குனராகவும்,திலிப் சுப்பராயன் சண்டை பயிற்சி இயக்குனராகவும் பணியாற்றுகின்றனர்.
இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சற்றேறக்குறைய இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கூடிய விரைவில் ஒவ்வொன்றாக வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.