V4UMEDIA
HomeNewsKollywoodதமிழில் வெளியானது மாபெரும் வெற்றி பெற்ற 'பிரேமலு'!

தமிழில் வெளியானது மாபெரும் வெற்றி பெற்ற ‘பிரேமலு’!

மலையாளத் திரை உலகில் சிறந்து விளங்கும் முன்னணி திரைக்கலைஞர்களான ஃபஹத் ஃபாசில்,திலீஷ் போத்தன்,ஷ்யாம் புஷ்கரன் ஆகியோரது கூட்டு தயாரிப்பு நிறுவனமான பாவனா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கிரண் ஜோசி, கிரிஷ் ஏ.டி இருவரின் கதை,திரைக்கதை,வசனத்தில் கிரிஷ் ஏ.டியின் இயக்கத்தில் நஸ்லென்,மமிதா பைஜு, மேத்யூ தாமஸ், அல்தாஃப் சலீம்,ஷ்யாம் மோகன்,அகிலா பார்கவன்,மீனாட்சி ரவீந்திரன்,சங்கீத் பிரதாப், சமீர்கான் ஆகியோரது நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதி மலையாளத்தில் வெளியான ‘பிரேமலு’ காதல்,நகைச்சுவை நிறைந்த திரைப்படம் ஆகும்.

கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா,தெலுங்கானா,கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நேரடியாக மலையாளத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. அங்கும் வெற்றிகரமாக ஒடி மொத்தமாக உலக அளவில் 100 கோடி வசூலை தாண்டியது.

தற்போது தமிழ்நாட்டில் இத்திரைப்படம் நேரடியாக மலையாளத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருந்தாலும், தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ரெட் ஜெயன்ட் மூவிஸ் இத்திரைப்படத்தின் தமிழ் பதிப்பு வெளியீட்டு உரிமையை பெற்று,இத் திரைப்படத்தின் தமிழ் பதிப்பை இன்று மார்ச்-15,2024 அன்று தமிழ்நாடு முழுவதும் வெளியிட்டு உள்ளது.

இத்திரைப்படத்தின் இசையமைப்பாளராக விஷ்ணு விஜய் பணியாற்றியுள்ளார். அஜ்மல் சாபு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஆகாஷ் ஜோசப் படத்தொகுப்பாளராகவும் வினோத் ரவீந்திரன் கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளனர்.ஏற்கனவே மாபெரும் வெற்றி அடைந்த இத்திரைப்படம் தமிழ்ப் பதிப்பிலும் வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular

Recent Comments