V4UMEDIA
HomeNewsKollywoodதாய்லாந்து சென்ற 'குபேரா' படக்குழு!

தாய்லாந்து சென்ற ‘குபேரா’ படக்குழு!

தனுஷின் 51-வது படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்கள் மூலம் சுனில் நரங் மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் தயாரிக்க, சோனாலி நரங் வழங்குகிறார். தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்குகிறார். இவர் தேசிய விருது வென்ற இயக்குநர் ஆவார். இவர் தெலுங்கில் வெளியான ‘ஃபிடா’ ‘லவ் ஸ்டோரி’ உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் கவனம் பெற்றவர்.

தனுஷின் நடிப்பில் 51-வது படமாக உருவாகி வரும் ‘குபேரா’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு தாய்லாந்து சென்றுள்ளது.இந்த படப்பிடிப்பில் நாகர்ஜுனா அக்கினேனி படக்குழு உடன் இணைந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். சேகர் கம்முலா இயக்கத்தில் படப்பிடிப்பு வெகு விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நடிகர் தனுஷ் அவர்களும் படப்பிடிப்பில் இடைவிடாது கலந்து கொண்டுள்ளார்.

படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.ராமகிருஷ்ணா சபானி மற்றும் மோனிகா நிகோத்ரே ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பைக் கவனிக்கிறார்கள்.சர்வதேச சண்டைப் பயிற்சி இயக்குநரான யானிக் பென் இப்படத்தில் பணியாற்றுகிறார்.

Most Popular

Recent Comments